முதல் பக்கம் | பட்டுப்புழு வளர்ப்புத் துறை - தமிழ்நாடு | வீடியோ தொகுப்பு | புத்தகங்கள்| கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | ||||||
பட்டுப்புழு வளர்ப்பு அறை |
||||||
இளம்புழு வளர்ப்பு பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் மிகுந்த கவனம் தேவைப்படக்கூடிய ஒன்று இளம்புழு வளர்ப்பாகும். பட்டுப்புழுக்களில் நோய்கள் வராமல் தடுக்க இளம்புழுக்களிலிருந்தே நல்ல சுகாதாரமான சூழலில் வளர்க்க வேண்டும். சரியான மல்பெரித் தழைகளைக் கொடுத்து வளர்ப்பறைகளில் தகுந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் சூழ்நிலையில் இளம்புழுக்களை வளர்த்தால் அவை நோய் எதிர்க்கும் திறன் பெற்று பிறகு நல்ல மகசூலைத் தர வல்லது. இளம்புழு வளர்ப்பறை ஒவ்வொரு பட்டு விவசாயியும் இளம்புழு வளர்ப்பிற்கெனத் தனியாக ஒர் அறை வைத்திருக்க வேண்டும். இதனால் முதரிந்த புழுக்களை வளர்க்குமிடங்களிலிருந்து கிருமித் தொற்றைத் தவிர்க்க முடியும். மேலும் இளம்புழு வளர்ப்பிற்கு சிறிய அளவே இடவசதி தேவைப்படுவதால், தட்ப வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க முடியும், இளம்புழு வளர்ப்பறைகளில் 28 செல்சியஸ் வெப்பநிலையும் காற்றில் ஈரப்பதம் 70 முதல் 80 சதமும் இருக்க வேண்டும் ஒரு ஏக்கர் மல்பெரித் தோட்டத்திற்கு இளம்புழு வளர்ப்பிற்கு சுமாராக 150 சதுர அடி பரப்பு கொண்ட வளர்ப்பறைத் தேவை. வளர்ப்பறை 15 X 10 X 16 என்ற அளவில் அமைக்க வேண்டும். நான்கு பக்கமும் கதவுகள் கொண்ட ஜன்னல்களை அமைக்க வேண்டும். இளம்புழு வளர்ப்பு சாதனங்கள் தட்டுகளில் மெழுகுத்தாளைப் பரப்பி அவற்றின் மேல் பட்டுப்புழு முட்டை அட்டைகளை வைக்கவேண்டும். நன்கு நனைத்துப் பிழியப்பட்ட நுரைப் பஞ்சுப் பொதிகளை தட்டுகளில் வைத்து மெழுகுத் தாளைக் கொண்டு முட்டை அட்டைகளை மூட வேண்டும். முட்டை பொறிப்பு முன்னேற்பாடுகள் அடைகாத்தல், இருட்டடைப்பு
|
| |||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |
||||||